டோனி வெறுக்கும் முக்கிய தொழில்நுட்பம் ஐபிஎல்-ல் அறிமுகம் video
டோனி விரும்பாத டிஆர்எஸ் தொழில்நுட்பம் முதன்முதலாக இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பயன்படுத்தப்படவுள்ளது 11-வது ஐபிஎல் தொடர், வரும் ஏப்ரல் 7ம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.
முதல் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்நிலையில் முதன்முதலாக ஐபிஎல் தொடரில் டிஆர்எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்த பிசிசிஐ அனுமதி தந்துள்ளது நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்வது தான் டிஆர்எஸ் முறையாகும்.
இந்த தொழில்நுட்பத்தை இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோனி எப்போதும் ஆதரித்ததில்லை. அதேசமயம், டிஆர்எஸ் முறையை சரியாக கையாள்வதில் டோனி திறமையானவர்.
அவர் அப்பீல் செய்தால், அவுட் நிச்சயம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதனாலேயே DRS – Dhoni Review System என்று கூட அழைக்கப்படுவதுண்டு. ஆனால், இப்போதும் கூட டோனி இந்த தொழில்நுட்பத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment